நான் தினமும் வேதாகமத்தை வாசிக்கிறேன். ஆனால் பெரும்பாலும், இதன் பொருள் என்னவென்று எனக்கு புரிவதில்லை. மொழி எப்போதும் எளிதானது அல்ல, மற்றும் கர்த்தர் என்னிடம் என்ன சொல்கிறார் என்பதும் தெரியவில்லை.
குழந்தைகளின் இந்த கருத்துக்கள் என்னை வேதத்தை வாசிக்கும் வாசகர்கள் வேதத்தின் செய்தியை புரிந்துக்கொள்ள உதவ ஒரு ‘பாலம்’ போல இருக்கும் எளிய புத்தகத்தை எழுத என் இதயத்தை துண்டிவிட்டன. வேதாகமம் மிகவும் விலையேறப்பற்ற புத்தகம். அது நமது படைப்பாளரின் செய்தியை நமக்கு தருகின்றது!
இந்த புத்தகத்தின் வடிவமைப்பு ஒரு நோக்கத்தோடே வித்தியாசமாக தினமும் ஒரு வசனத்திற்கு விளக்கவுரையோ அல்லது தியானத்தை தருகின்ற தின தியான புத்தகங்களை போன்று இல்லாமல் வேறு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதியாகமத்திற்கு பாலமாக, நீங்கள் ஒரு சில வேதாகம வசனங்களை வாசிப்பீர்கள். அதன்பிறகு, நீங்கள் சிந்திக்கவும் ஜெபிக்கவும் அந்த பகுதியில் இருந்து ஒரு சில செயல்பாடுகள் அல்லது எண்ணங்கள் இருக்கும்.